பாலியல் குற்றங்களை தடுக்க வலியுறுத்தல்
சேலம்: இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலர் பவித்ரன், இந்திய ஜன-நாயக வாலிபர் சங்க மாவட்ட செயலர் பெரியசாமி, அனைத்திந்-திய ஜனநாயக மாதர் சங்கத்தலைவி தேவி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்-தனர்.தொடர்ந்து தேவி கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் சமீபகால-மாக பள்ளி குழந்தைகள், மாணவியர் மீதான பாலியல் வன்-முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏற்காடு, ஆத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள், மாணவி-யருக்கு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் மாவட்டத்தின் அனைத்து கல்வி நிலையங்களில், மாணவியர், பெண்கள் பாது-காப்பை உறுதிப்படுத்தி, பெற்றோர், குழந்தைகளை அச்சமின்றி பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுப்ப, பாலியல் சமத்துவ கல்வி நிலைய வளாகங்கள் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.