வரி கட்ட தவறினால் ஜப்தி நடவடிக்கை
இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி கமிஷனர் கோபிநாத் அறிக்கை: இடைப்பாடி நகராட்சி மக்கள், 2024 - -25ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து, காலி மனை, தொழில் வரிகள், குடிநீர் கட்டணத்தை, நகராட்சி கருவூலத்தில் நிலுவையின்றி செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி, நீதிமன்ற வழக்கு உள்ளிட்டவற்றை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.மக்கள் நலன் கருதி சனிதோறும் கணினி வசூல் மையம் மற்றும் இணையதளம் வழியே செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.