உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதியவருக்கு 100வது பிறந்தநாள் குடும்பத்தினர் கொண்டாட்டம்

முதியவருக்கு 100வது பிறந்தநாள் குடும்பத்தினர் கொண்டாட்டம்

தாரமங்கலம்:தாரமங்கலம், வீரபத்திரன் கோவில் தெருவை சேர்ந்த அண்ணாமலை, பருவதம் தம்பதியர். தம்பதிக்கு ஐந்து மகன், மூன்று மகள் மற்றும் பேரன், பேத்திகள், கொள்ளு பேர குழந்தைகள் என, 56 பேர் உள்ளனர்.இதில் பருவதம் கடந்த ஓராண்டுக்கு முன் இறந்தார். இந்நிலையில் அண்ணா மலைக்கு நேற்று, 100வது பிறந்தநாள். அதை சிறப்பாக கொண்டாட குடும்பத்தினர் முடிவு செய்தனர். நேற்று தங்கள் வீட்டில் அனைவரும் கூடினர். உறவினர்கள் அனைவரையும் அழைத்து கேக் வெட்டி, வாழ்த்து கூறி, 100 வது பிறந்தநாளை கொண்டாடினர். அங்கு வந்திருந்த அனைவரும் அண்ணாமலையிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை