மருத்துவமனையில் விவசாயி மர்மச்சாவு
சேலம், அரசு மருத்துவமனையில் விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.தலைவாசல் அருகே வீரகனுாரை சேர்ந்த, விவசாயி செல்வம், 42. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன் விஷம் குடித்து மயங்கி கிடந்த செல்வத்தை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சையில் இருந்த அவர், நேற்றிரவு, 'வீட்டுக்கு செல்லலாம்' என, மனைவியிடம் வற்புறுத்தியுள்ளார்.மனைவி எதிர்ப்பை யும் மீறி, 3வது மாடியில் இருந்து இறங்கி வந்த நிலையில் கண் சிகிச்சை பிரிவில், அவர் இறந்து கிடந்தார். இதனால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எங்கிருந்தும் தவறி விழுந்து இறந்தாரா என, மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.