மேலும் செய்திகள்
தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்ற மானியம்
14-Aug-2025
வீரபாண்டி, தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்ற அரசு மானியம் வழங்குகிறது.இதுகுறித்து வீரபாண்டி வேளாண் உதவி இயக்குநர் கார்த்திகாயினி அறிக்கை: வீரபாண்டி வட்டாரத்தில், 4 ஆண்டாக, 22 ஊராட்சி, இந்த ஆண்டு, 3 ஊராட்சிகளில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் தரிசு நிலமாக வைத்திருக்கும் தனி நபர் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ஹெக்டேருக்கு, 9,600 ரூபாய், வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த மானியத்தை பெற விரும்பும் விவசாயிகள், கடத்துார் வேளாண் விரிவாக்க மையம் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை அணுகி, திட்ட விபரங்கள் பெறலாம். பின், புல்டோசர் கொண்டு தரிசு நிலங்களில் முட்புதர்களை நீக்கி, சமன்படுத்தி உழவுப்பணி மேற்கொண்டு அதற்கான கடன் பட்டியல்கள் மற்றும் பயனாளி விபரங்களை சமர்ப்பித்தால், உரிய ஆய்வுக்கு பின், மேற்கண்ட மானியம் பெற்று வழங்கப்படும். மேலும் பயிர் சாகுபடி செய்து அதன் அடங்கலையும் ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். ஒரு விவசாயி அதிகபட்சம், 2 ஹெக்டேர் வரை பயன் பெறலாம்.
14-Aug-2025