நிழற்கூடம் இடிந்து விழுவதால் அச்சம்
பனமரத்துப்பட்டி:சேலம் - கம்மாளப்பட்டி சாலையில், கூட்டாறு பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் உள்ளது. தும்பல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரும் நோயாளிகள், தும்பல்பட்டி, சாமகுட்டப்பட்டி, கூட்டாறு பகுதி மக்கள், அந்த நிழற்கூடத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் பராமரிக்காமல் விடப்பட்டதால், மேற்கூரை தளம் சேதமடைந்துள்ளது.மேற்கூரை கான்கிரீட் கலவை பெயர்ந்து கொட்டுகிறது. பயணியர் தலையில், சிமென்ட் கலவை விழுகிறது. சமீபத்தில் பெய்த மழையால், நிழற்கூடத்தில் தண்ணீர் கொட்டியது. இதனால் நிழற்கூடத்தில் நிற்க பயணியர் அச்சப்படுகின்றனர். மழை, வெயில் காலங்களில், திறந்த வெளியில் நின்று சிரமப்படுகின்றனர்.நிழற்கூடத்தை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தினர்.