உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் /  ஊதுபத்தி ஆலையில் தீ விபத்து

 ஊதுபத்தி ஆலையில் தீ விபத்து

சேலம்: ஊதுபத்தி ஆலையில் ஏற் பட்ட தீ விபத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. சேலம், எருமாபாளையத்தை சேர்ந்தவர் நஷீர், 36. அதே பகுதியில் ஊதுபத்தி தயாரிப்பு ஆலை வைத்துள்ளார். நேற்று காலை, 6:00 மணிக்கு ஆலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவால், விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலா ன பொருட்கள் சேதமடைந்தன. கிச்சிப்பாளையம் போலீசார் விசா ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை