உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஞ்சு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து

பஞ்சு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து

சங்ககிரி: சங்ககிரியில், பஞ்சு ஏற்றி வந்த லாரியில் புகை வந்ததையடுத்து, உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்-டது.சத்தியமங்கலத்தில் இருந்து, ஹைதராபாத்துக்கு பஞ்சு மூட்டை-களை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுள்ளது. நேற்று இரவு, 9:00 மணிக்கு சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியில் லாரி சென்ற போது, பஞ்சு மூட்டைகளில் உராய்வு ஏற்பட்டு, தீப்பற்றி புகை வந்துள்ளது. குறைந்த அளவில் புகை வரும்போதே, அந்த வழி-யாக சென்ற மக்கள் கொடுத்த தகவல்படி, டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு, அதிலிருந்து வந்த தீயை அணைத்துள்ளார். புகை வந்தவுடன் உடனடியாக தீயை அணைத்ததால், பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் லாரியும், பஞ்சு மூட்டைகளும் தப்பியது. சங்-ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை