உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சோனா கலை அறிவியல் கல்லுாரியில் முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா

சோனா கலை அறிவியல் கல்லுாரியில் முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா

சேலம், சேலம் சோனா கலை, அறிவியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா, அங்குள்ள வள்ளியப்பா கலையரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.முதல்வர் காதர் நவாஷ், மாணவர்கள், பெற்றோரை வரவேற்றார். துணைத்தலைவர்கள் சொக்கு, தியாகு முன்னிலை வகித்தனர். தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் கல்லுாரி பருவத்தை நன்முறையில் அமைத்துக்கொண்டு, பெற்றோரை பேணிப்பாதுகாக்க வேண்டும்,'' என்றார். எழுத்தாளர் ராம்குமார் சேசு, பள்ளி காலத்தில் இருந்து கல்லுாரி வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் சிறப்பு, மாணவர்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து பேசினார். மேலும் கல்லுாரி நிர்வாகம் சார்பில், மாநில கல்வி பிரிவில், 550 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள், மத்திய கல்வியில்(சி.பி.எஸ்.இ.,), 450க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு, தலா, 5,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.சோனா நிறுவன இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர் செந்தில்குமார், கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் மோகனப்பிரியா, முதலாண்டு மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி