உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உபரிநீர் செல்லும் காவிரியில் மீன் பிடித்தவர் வெளியேற்றம்

உபரிநீர் செல்லும் காவிரியில் மீன் பிடித்தவர் வெளியேற்றம்

மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து நேற்று மதியம் பாசனம் மற்றும் உபரியாக, 1.10 லட்சம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதில், 92,000 கனஅடி உபரிநீர், 16 கண் மதகு வழியே சென்று காவிரியாற்றில் கலக்கிறது. நேற்று மதியம் உபரிநீர் பெருக்கெடுத்து செல்லும் காவிரியாற்றில், சின்னகாவூர் அருகே சில மீனவர்கள், துாண்டில் மற்றும் வலைவீசி மீன் பிடித்தனர். அப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள், தம்பதியர், மொபைலில், 'செல்பி' எடுத்தனர்.அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழுவினர், மீனவர்கள், மக்களை எச்சரித்து, காவிரி கரையோரத்தில் இருந்து வெளியே அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை