மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் ரோடு மறியல்: 168 பேர் கைது
21-Aug-2025
சேலம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் தங்கமணி தலைமை வகித்தார். துணை தலைவர் ராமச்சந்திரன் பேசினார்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என அறிவித்து இதுவரை வழங்காததை கண்டித்தும், காலி பணியிடங்களை நிரப்புதல்; 10 ஆண்டு பணி முடித்த சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல்; சத்துணவு ஊழியர்களுக்கு, 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பில் இருந்த போலீசார் பேச்சு நடத்தியும் உடன்படவில்லை. இதனால், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரா, மாநில செயலர் வைத்தியநாதன் உள்பட, 59 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
21-Aug-2025