உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு

சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு

சங்ககிரி: சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்த கடைகள் சேதமடைந்ததால், இரு ஆண்டுகளுக்கு முன் கடைகள் இடிக்கப்பட்டு, அந்த இடம் தற்போது காலியாக உள்ளது. அங்கு கடைகள் கட்ட, இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில் சாலையோரத்தில் உள்ள நடைபாதைகளில், மக்கள் நடந்து செல்ல முடியாதபடி, அதிகளவு கடைகள் உள்ளன. அந்த கடைகளின் மேற்புறம் போடப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் உள்ள குச்சிகள், கம்பிகள், சாலையை ஒட்டி நீட்டிக்கொண்டுள்ளன. மேலும் நடைபாதையில் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. அதனால் நடைபாதை கடைகளை அகற்ற, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை