எறும்பு தின்னி விற்க முயற்சி 4 பேரை பிடித்த வனத்துறை
ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே சிக்கம்பட்டி பஸ் ஸ்டாப்பில் எறும்பு தின்னி விற்கப்படுவதாக, சேலம் வனம், வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனால் டேனிஷ்பேட்டை வனச்சரகர் தங்கராஜ் தலைமையில் குழுவினர் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மினி சரக்கு வேனில் எறும்பு தின்னி வைத்துக்-கொண்டு, ஏற்காடு, நல்லுார் குழந்தை, 39, பழனி, 34, சத்தி-யராஜ், 31, ஆகியோர், சிக்கம்பட்டியை சேர்ந்த மூர்த்தி, 52, என்ப-வரிடம் விற்க முயன்றனர். இதனால், 4 பேரையும், வனத்துறை-யினர் சுற்றிவளைத்தனர். எறும்பு தின்னி, வேனை பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்தனர். பின் எறும்பு தின்னி வனப்பகுதியில் விடப்பட்டது.