உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., அமைப்பு செயலராக நியமனம்

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., அமைப்பு செயலராக நியமனம்

மேட்டூர்: அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., சந்திரசேகரன், கட்சியின் அமைப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை:மேட்டூர் நகர செயலராக பணியாற்றிய, ராஜ்ய-சபா முன்னாள் எம்.பி., சந்திரசேகரன், அ.தி.மு.க., அமைப்பு செயலராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு பதில், மேட்டூர் நகர மாணவர் அணி இணை செயலர் பொறுப்பில் இருந்த சரவணன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மேட்டூர் நகர செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சரவணன், தற்போது சேலம் மாவட்ட மகளிர் அணி செயலர், மேட்டூர் நகராட்சி முன்னாள் தலைவி லலிதாவின் கணவர் ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை