முன்னாள் அமைச்சரின் நினைவு தினம் அனுசரிப்பு
முன்னாள் அமைச்சரின்நினைவு தினம் அனுசரிப்புவீரபாண்டி, நவ. 24-மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகத்தின், 12ம் ஆண்டு நினைவு தினம், சேலம் மாவட்டம் பூலாவரியில் உள்ள, தி.மு.க., அலுவலகம் முன் நேற்று அனுசரிக்கப்பட்டது. அங்கு ஆறுமுகம் மற்றும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாறன் படங்களுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து அங்கிருந்து, ஆறுமுகம் நினைவிடம் வரை, நிர்வாகிகள், தொண்டர்கள், அமைதி ஊர்வலம் வந்தனர். பின் நினைவிடத்தில், அமைச்சர் ராஜேந்திரன், தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு, ஒன்றிய குழு உறுப்பினர் மலர்விழி, ஸ்ரீ ராஜகணபதி மெடிக்கல்ஸ் பாண்டிதுரை ஆகியோர் மாலை அணிவித்து மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள், அஞ்சலி செலுத்தினர்.சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, தி.மு.க., அலுவலக வளாகத்தில் உள்ள, முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் சிலைக்கு, அமைச்சர் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் மாறன் படத்துக்கு, அஞ்சலி செலுத்தினார்.இதில் மேயர் ராமச்சந்திரன், மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன், மாநகர் செயலர் ரகுபதி உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.