மேலும் செய்திகள்
சங்ககிரி பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம்
22-Nov-2025
சங்ககிரி: சங்ககிரி நகராட்சி, 1வது வார்டு பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில், கட்டி கொடுக்கப்பட்ட கழிவறை நேற்று திறக்கப்பட்டது. சங்ககிரி நகராட்சி, சார்பதிவாளர் அலுவலகம் அருகே நகராட்சியின், 1வது வார்டு ஊராட்சி ஒன்-றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு பள்ளி மேலாண்மை குழு மற்றும் முன்னாள் மாண-வர்கள் சார்பில் 1.50 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக கழிவறை கட்டி கொடுத்தனர். சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளரும், தி.மு.க., நகர செயலருமான முருகன் நேற்று திறந்து வைத்தார். தலைமை ஆசிரியர் ராஜேஸ்-வரி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவி காயத்ரி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பி-னர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்-டனர்.
22-Nov-2025