உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொலை வழக்கு 4 பேருக்கு குண்டாஸ்

கொலை வழக்கு 4 பேருக்கு குண்டாஸ்

சேலம், துாத்துக்குடியை சேர்ந்தவர் மதன்குமார். இவர் கொலை வழக்கில், சேலம், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி, கடந்த மாதம், 15ல் கையெழுத்திட்டு விட்டு, அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அப்போது, துாத்துக்குடியை சேர்ந்த ஹரிபிரசாத், 26, அந்தோனி, 24, சந்தோஷ், 22, ஜெயசூர்யா, 25, ஆகியோர், பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர். பட்டப்பகலில் பொது அமைதி பாதிக்கும்படி நடந்து கொண்ட, 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சேலம் போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை