மேலும் செய்திகள்
விவசாயி கொலை வழக்கில் 3 பேர் கைது
12-Sep-2025
ஓமலுார், இரண்டு பவுன் நகை வழிப்பறி வழக்கில், போலீஸ் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம், ஓமலுார் பனங்காட்டூரை சேர்ந்தவர் எல்லப்பன், 56. இவர் செப்டிக் டேங்க் கழிவுகளை, விவசாய நிலங்களுக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த செப்., 20 மதியம், 3:00 மணியளவில் கோட்டமேட்டுப்பட்டி பகுதியில் உள்ள, ஒரு தோட்டத்தில் செப்டிக்டேங்க் கழிவுகளை விட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர், எல்லப்பனிடம் தகராறில் ஈடுபட்டு, மிரட்டி அவரிடமிருந்த, 2 பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டு சென்றனர்.இது குறித்து எல்லப்பன் அளித்த புகார்படி, ஓமலுார் போலீசார் நேற்று ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சத்தியராஜ், 31, இளங்கோ, 28, வெண்ணந்துாரை சேர்ந்த அஜித்குமார், 27, சேலம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ்காரர் சிவக்குமார், 25, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட சேலம் சூரமங்கலம் போலீஸ்காரர் சிவக்குமாரை, சேலம் போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரி, சஸ்பெண்ட் செய்து நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.
12-Sep-2025