உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போட்டித்தேர்வில் பழங்குடி மாணவர்கள் சாதிக்க தி கொங்கு பாலிடெக்னிக்கில் இலவச பயிற்சி

போட்டித்தேர்வில் பழங்குடி மாணவர்கள் சாதிக்க தி கொங்கு பாலிடெக்னிக்கில் இலவச பயிற்சி

மல்லுார்:ரயில்வே, வங்கி, எஸ்.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி, ஆகிய போட்டித்தேர்வுகள் எழுத, பழங்குடி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முயற்சி செய்து, அதன்படி, மல்லுார் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில், 250 பேர் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். அங்கு சமீபத்தில் வந்த, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, பாலிடெக்னிக் வளாகம், விடுதியை பார்வையிட்டார்.தொடர்ந்து, பயிற்சி பெறும் மாணவ, மாணவியர் இடையே பேசுகையில், ''தமிழக அரசு பழங்குடியின மாணவ, மாணவியர் முன்னேற்றத்துக்கு, போட்டித்தேர்வு பயிற்சிக்கு உண்டான செலவினங்கள் அனைத்தையும் ஏற்று, இலவச பயிற்சி அளிக்கிறது. இதில் பங்கேற்கும் அனைவரும், தவறாமல் வகுப்புகளில் பங்கேற்று, போட்டித்தேர்வில் வெற்றி பெற வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, பாலிடெக்னிக் தலைவர் ராமலிங்கம், முதல்வர் சரவணன், நன்கு பயிற்சி பெற அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி