உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜூலை 19ல் கோபி - கள்ளிப்பட்டியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

ஜூலை 19ல் கோபி - கள்ளிப்பட்டியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

கோபி, வயிறு எரிச்சல், வயிறு உப்புசம், மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மட்டும், இலவச மருத்துவ ஆலோசனை முகாம், கோபி அருகே கள்ளிப்பட்டியில் ஜூலை 19ல் நடக்கிறது.சென்னை, அப்போலா மருத்துவமனை, குடல், இரைப்பை துறையின் தலைவர், டாக்டர் பழனிசுவாமி. இவர் தனது சொந்த ஊரான, ஈரோடு மாவட்டம், கோபி அருகே கள்ளிப்பட்டியில், மரகதம் ராமசாமி திருமண மண்டபத்தில் வரும், ஜூலை 19, காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது. அந்த முகாமில் வயிறு, குடல், இரைப்பை ஆகிய உறுப்புகளில் ஏற்படும், வயிறு எரிச்சல், வயிறு உப்புசம், மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு ஆகிய நோய்களுக்கு மட்டும் இலவச ஆலோசனை வழங்குகின்றனர். சென்னை, அப்போலா மருத்துவமனையின், குடல், இரைப்பை துறையின் தலைவர் டாக்டர் பழனிசுவாமி தலைமையிலான டாக்டர்கள், சத்தியபாமா, மோகன்பிரசாத், வெங்கடகிருஷ்ணன், பிரேம்குமார், பாசுமணி, பிரமநாயகம், பரத்குமார், கார்த்திக்கேயன், பாலகுமரன், கார்த்திக்நடராஜன், செந்துாரன் என்ற கீர்த்தி ஆகியோர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவினர் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர்.அதையடுத்து பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கோலோனோஸ்கோப்பி பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து டாக்டர் பழனிசுவாமி தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடி விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த அரிய மருத்துவ முகாமை, பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொடர்புக்கு: 99434-13705, 98845-73993.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி