சேலம் : தொழில் தொடங்க, பெண்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.இதுகுறித்து இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:பெண் தொழில் முனைவோரை உருவாக்க, பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராம, நகர்புற பெண்களுக்கு, பயிற்சி வகுப்புகளை இலவசமாக வழங்குகிறது. 'சங்கல்ப்' திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு, சிறுதானிய உணவு பொருட்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி, தென்னை நார் பூந்தொட்டி தயாரித்தல், கைவினை பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட குறுந் தொழில் தொடங்க சான்றிதழுடன் கூடிய இலவச பயிற்சி, ஜூன் முதல் வாரம் தொடங்கப்படும்.இதில் மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்கள் பெறுவது, வங்கி கடன் பெற திட்ட அறிக்கை தயாரித்தல், உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக, சமூக ஊடகங்கள் மூலம் சந்தைப்படுத்தல், தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். இதன் மூலம் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி, குடும்ப வாழ்வாதாரத்தை பெருக்கலாம். இதில், 40 பெண்களுக்கு மட்டும் அனுமதி. இதுதொடர்பான தகவல்களுக்கு, 9944392870 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை, 'எண், 369, சக்தி நகர், எஸ்.பி., பங்களா பின்புறம், அஸ்தம்பட்டி, சேலம் - 636 007' என்ற அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.