மேலும் செய்திகள்
தீ தடுப்பு பயிற்சி முகாம் மாவட்ட அலுவலர் தகவல்
3 hour(s) ago
சேலம், உலக தத்தெடுப்பு தினத்தையொட்டி, நாளை நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடக்கிறது.ஆண்டுதோறும் அக்.,9 உலக தத்தெடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சேலத்தில் கால்நடை பராமரிப்பு துறையுடன், பிராணிகள் நல தன்னார்வ அமைப்பு இணைந்து நாளை (அக்.,11) நாய்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் நடத்துகிறது.சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, கால்நடை மருத்துவமனையில் காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, நாய்களுக்கு நோய் தொற்று தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.நாய்களை வளர்ப்போர் அழைத்து வந்து, இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.
3 hour(s) ago