சிவில் இன்ஜினியர்ஸ் சார்பில் இலவச நீர் மோர் வழங்கல்
சேலம்: சேலத்தில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் மற்றும் சங்க அறக்கட்டளை இணைந்து, இலவச நீர் மோர், எலுமிச்சை ஜூஸ், தர்பூசணி பழங்களை, கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும், கடந்த, 28 முதல் தொடங்கி வழங்கி வருகின்றனர். முன்னதாக திறப்பு விழாவில், சேலம் சங்க அறக்கட்டளை தலைவர் மயில்ராஜூ, செயலர் குப்புசாமி, பொருளாளர் சங்கர், சேலம் சங்கத்தின் நடத்துனர் குழு தலைவர் பொறியாளர் கமல், நிர்வாக செயலர் ஜெயக்குமார், செயலாக்க செயலர் சங்கர் கணேஷ், பொருளாளர் விஜயன் பங்கேற்றனர்.பொறியாளர் சங்க முன்னாள் தலைவர் கேசவன், பொறியாளர் வரதராஜு, பொறியாளர் செந்தில் மணி உள்ளிட்ட திரளான பொறியாளர்களும் பங்கேற்றனர்.