உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காஸ் கசிந்து தீ விபத்து கட்டுமான பொருள் நாசம்

காஸ் கசிந்து தீ விபத்து கட்டுமான பொருள் நாசம்

ஆத்துார் ;ஆத்துார், தென்னங்குடிபாளையம் ஊராட்சி மாரியம்மன் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் புனரமைப்பு பணி நடக்கிறது. அப்பணியில் வெளி மாவட்டத்தை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கிக்கொள்ள, சமையல் செய்ய, கோவில் அருகே கட்டடம் உள்ளது.அங்கு நேற்று காலை, 7:00 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த ராணி, 40, சமையல் செய்ய வந்தார். காஸ் சிலிண்டரை பற்ற வைத்தபோது, கசிவு ஏற்பட்டதில் தீப்பற்ற, ராணி உடனே வெளியே ஓடி வந்து விட்டார். பின் அங்கிருந்தவர்கள், மேற்கூரையான ஆஸ்பெஸ்டாஸ் அட்டையை உடைத்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வந்த ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆனால் கோவில் கட்டுமான பொருட்கள், சமையல் பொருட்கள் நாசமாகின. ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !