| ADDED : பிப் 16, 2024 12:47 PM
சேலம்: தமிழகத்தில் மார்ச், 1 முதல், 22 வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்க உள்ளது. சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு, 35,758 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். இதில் வேதியியல், உயிரியியல், கணினி அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களில், தற்போது செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு விடைத்தாள், அந்தந்த மாவட்டங்களுக்கும், சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அங்கு விடைத்தாள்களில் மாணவர்களின் முகப்பு சீட்டு வைத்து தைக்கும் பணி நேற்று தொடங்கியது.இதில் தமிழ், ஆங்கில பாடங்களுக்கு கோடிட்ட விடைத்தாள், வரலாறுக்கு, 'மேப்', கணிதத்துக்கு, 'கிராப்' இணைப்பு என, விடைத்தாளில் வைத்து தைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில், இப்பணியை முடிக்க, தேர்வு மைய பொறுப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.