மேலும் செய்திகள்
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
11-Oct-2024
சேலம்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல குழுமம், தொன் போஸ்கோ அன்பு இல்லம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், விழிப்பு-ணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அன்பு இல்ல இயக்குனர் காஷ்மீர் ராஜ் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் ராயல் முன்னிலை வகித்தார். அதில் பெண் குழந்தைகளின் உரி-மைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து கையெழுத்து பெற்றனர்.குழந்தைகள் பாதுகாப்பு நல குழு உறுப்பினர் பத்தினி, மக்க-ளுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.மேலும் பஸ் ஸ்டாண்டில் இருந்த டிரைவர்கள், கண்டக்டர்கள், பள்ளப்பட்டி போலீசார், வியாபாரிகள், மக்கள் என பலரிடமும், பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து கையெழுத்து பெற்றனர்.
11-Oct-2024