உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் அரசு ஏகலைவா பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

ஏற்காட்டில் அரசு ஏகலைவா பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஏற்காடு: ஏற்காட்டில் உள்ள ஏகலைவா பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அறிவியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படிக்கும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் சொல்லித் தரப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w3vw6hui&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சேலம் தும்பல் நொய்யமலை பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் இளையகண்ணு(37) என்பவர், கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்காலிகமாக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பல ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை இவர் மீது பழங்குடியினர் நலத்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இவருக்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் செல்வாக்கு இருந்ததால் அதிகாரிகள் இவரை கண்டித்து மட்டும் அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 5ம் தேதி, சேலம் குழந்தைகள் நல அலுவலர்கள், பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது 12 மாணவிகள், இளையகண்ணுவின் பாலியல் சீண்டல் குறித்து புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். பள்ளி மாணவி ஒருவர், சேலம் கொண்டலாம்பட்டி மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். விசாரணையில் இளையகண்ணு மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனையறிந்த அவர் தலைமறைவானார். இந்நிலையில், சென்னையில் நேற்று, இளையகண்ணுவை கைது செய்த போலீசார் ஏற்காடு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Nagarajan D
பிப் 09, 2025 18:26

ஜாமீன் தர நாங்க ரெடி - நீதிமன்றங்கள்


மலைத்தேவன்
பிப் 09, 2025 15:14

மலைவாழ் மக்கள் சங்கத் தலைவரையும் உள்ளே தள்ளுங்க.


Vel1954 Palani
பிப் 09, 2025 14:43

சட்டம் இருந்து என்ன பயன்? காசுக்கு விலைபோகும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இருக்கும்வரை குற்றம் குறைய வாய்ப்பில்லை. அந்த காலம் போல் உறுப்பு குறைப்பு தண்டனை கால விரயம் செய்யாமல் கொடுக்கணும். அரசுக்கு மனமில்லையே என் செய்வது ?


Nagarajan D
பிப் 09, 2025 14:35

அது என்னடா குற்றவாளிகளை இடைநீக்கம் செய்யுறீங்க... அவன் குற்றவாளி அதுவும் குழந்தைகளிடம் தவறு செய்த அயோக்கியன் அவனை சுட்டு கொல்லுங்கள். எவனுமே இதை போல தவறு செய்யமாட்டான்


A1Suresh
பிப் 09, 2025 14:04

அதென்ன ஏகலைவா? - யூதாஸ் என்று பெயர் வைப்பார்களா ?


Sampath Kumar
பிப் 09, 2025 13:36

ஆசிரியர்க்கு என்று தனி மூஞ்சிய இருக்கு ராஜா அதுவும் எப்படி இருக்கனும் என்று நீ சொல்லற அணைத்து தகுதியும் வேணும் அது யாருக்கு உண்டு என்று சொல்லு பார்க்கலாம் இடஒதிக்கீட்டை கேவல படுத்துகின்றாய் உனக்கு யார் மீது கோவம் என்று புரிகின்றது மனிதன் அதுவும் ஆண் இந்த விஷயத்தில் அதிகம் நாட்டம் கொண்ட பிறவி ஜிம்மபெனசி குரங்கு இனத்திலும் இது அதிகம் உண்டு பிறவி குணம் ஒன்றும் செய்ய முடியாது


D Natarajan
பிப் 09, 2025 13:30

முதலில் பதவி நீக்கம். பின்னர் பிணை இல்லை. 10 ஆண்டு கட்டாயம் சிறையில் .


Visu
பிப் 09, 2025 11:59

கண்டித்து அனுப்பியவரின் ... இதுபோன்று குற்றறங்கள் குறையும்


rasaa
பிப் 09, 2025 11:20

இவரை பார்த்தால் ஆசிரியர் போலவா தெரிகின்றது. இட ஒதுக்கீடு அவசியம். அதைவிட அவசியம் எல்லாவகையிலும் தகுதியான ஒருவரை ஆசிரியர் பணிக்கு தேர்வுசெய்வது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை