| ADDED : டிச 05, 2025 10:49 AM
சேலம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்-கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழி-யர்கள், 228 பேரை, போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார். அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் என்பன உள்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 10 நிமி-டத்துக்கு பின், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீசார், 80 பெண்கள் உள்பட, 228 பேரை கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்-தனர்.முன்னதாக அர்த்தனாரி அளித்த பேட்டி:முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எங்கள் போராட்டத்துக்கு நேரில் வந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றார். தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். ஸ்டாலின் முதல்வரான பின் நடந்த அரசு ஊழியர் மாநாடு, ஜேக்டோ ஜியோ மாநாடுக-ளிலும், இதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாகியும், இதுவரை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.அதேபோல் காலி பணியிடங்களை நிரப்புதல், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றுதல் உள்பட, 12 கோரிக்-கைகளை நிறைவேற்றக்கோரி மறியல் நடத்தப்-பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.