உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவியிடம் ஆபாச பேச்சு: அரசு பள்ளி ஆசிரியர் டிஸ்மிஸ்

மாணவியிடம் ஆபாச பேச்சு: அரசு பள்ளி ஆசிரியர் டிஸ்மிஸ்

சேலம்: பள்ளி மாணவியிடம், ஆபாசமாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள நெய்யமலை அரசு பள்ளியில், தற்காலிக பட்டதாரி ஆசிரியராக ராஜ்குமார், 28, என்-பவர் பணியாற்றினார். இவர் கடந்த மாதம், 13ல் பிளஸ் 2 மாணவி ஒருவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இது தொடர்பாக, வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக, விசாரிக்க சி.இ.ஓ., கபீர், பள்ளி தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். அதன்படி தலைமை ஆசிரியர் (பொ) ராமச்சந்திரன் விசாரணை நடத்தி அறிக்கை வழங்கினார். இதன் அடிப்படையில், ஆசிரியர் ராஜ்குமாரை பணி-நீக்கம் செய்ய சி.இ.ஓ., உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளி மேலாண்மை குழுவில், கடந்த இரு நாட்க-ளுக்கு முன் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ராஜ்-குமார் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மாணவியின் புகார் தொடர்பாக, அவரது வகுப்பு ஆசிரியரிடம், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி