உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கல்

சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கல்

சேலம்: சேலம் ஸ்ரீசக்திகைலாஷ் மகளிர் கல்லுாரி, 2004ல் தொடங்கப்பட்டது. 'நாக்' கமிட்டியின் முதல் சுழற்சியிலேயே, 'யு' கிரேடு பெற்ற, முதல் தனியார் மகளிர் கல்லுாரி. மேலும் இக்கல்லுாரிக்கு பல்கலை மானியக்குழு, 10 ஆண்டுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கியுள்ளது. இதன்மூலம் மாணவியரின் திறன் வளர் மேம்பாட்டுக்கு பல்வேறு புது பாடத்திட்டங்களை கற்பித்தல் மூலம் வழங்க, சிறந்த வாய்ப்பை பெற முடிகிறது.தன்னாட்சி அந்தஸ்துக்கு உறுதுணையாக இருந்த கல்லுாரி முதல்வர், பல முதன்மையர்கள், பேராசிரியர்கள், அலுவலக மேலாளர், உதவியாளர்கள், மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும், ஏ.வி.எஸ்., - சக்தி கைலாஷ் கல்வி குழும தலைவர் கைலாசம், செயலர் ராஜவிநாயகம், தாளாளர் செந்தில்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை