உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை திருப்பூரில் குறைதீர் கூட்டம் சேலம் பெண்களுக்கு அழைப்பு

நாளை திருப்பூரில் குறைதீர் கூட்டம் சேலம் பெண்களுக்கு அழைப்பு

சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:திருப்பூர் மாவட்டம் அவிநாசி, காந்தி நகர் ஆர்.கே.ரெசிடென்சியில், ஜூலை, 31(நாளை) காலை, 9:30 மணிக்கு, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்ட பெண்களுக்கு குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. அதில் குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், வரதட்சனை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறையின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள், புதிதாக பெறப்படும் புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வாய்ப்பை சேலம் மாவட்ட பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விபரங்களுக்கு சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்: 126ல் செயல்படும், மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை