உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாராய வியாபாரிக்கு குண்டாஸ்

சாராய வியாபாரிக்கு குண்டாஸ்

ஆத்துார், ஆத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், கடந்த ஏப்., 7ல், கல்வராயன்மலை, நாகலுார் மலைப்பகுதியில் ஆய்வு செய்து, 400 லிட்டர் ஊறல், 50 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். ஊறல் போட்டு, சாராயம் காய்ச்சிய, கல்வராயன்மலை, கனியன்வளவை சேர்ந்த, குழந்தைவேல், 30, என்பவரை, கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே இரு சாராய வழக்குகள் உள்ளன. இதனால் அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை