உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

சேலம்: சேலம், அஸ்தம்பட்டி மேற்கு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு, 43. ஜான்சன்பேட்டை, கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்குமார், 43. இவர்கள் கடந்த நவ., 26ல், அஸ்தம்பட்டியை சேர்ந்த மயில்வேல் என்பவரை கத்திமுனையில் மிரட்டி, 3,000 ரூபாய் பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகார்படி, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அதேபோல் கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த தீனா, 22, பச்சப்பட்டியை சேர்ந்த பாலா, 22, ஆகியோர், கடந்த நவ., 28ல், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த வசந்தகுமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 5,000 ரூபாய் பறித்துக்கொண்டு, பீர் பாட்டிலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வசந்தகுமார் புகார்படி, இருவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில், பாலு, ராஜேஸ்குமார், பாலா, தீனா ஆகியோர், தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. இதனால், 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார். இதில் ஏற்கனவே பாலு மீது, 8 முறையும், ராஜேஸ்குமார், தீனா மீது இரு முறையும் குண்டாஸ் பாய்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை