உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைக்கோவிலுக்கு படியில் சென்றபோது மயங்கி விழுந்தவர் சாவு

மலைக்கோவிலுக்கு படியில் சென்றபோது மயங்கி விழுந்தவர் சாவு

மலைக்கோவிலுக்குபடியில் சென்றபோதுமயங்கி விழுந்தவர் சாவுபெத்தநாயக்கன்பாளையம், செப். 29-பெத்தநாயக்கன்பாளையம் அருகே சின்னம்மசமுத்திரத்தில் உள்ள மலையில், கொப்புக்கொண்ட பெருமாள் கோவில் உள்ளது. அங்கு செல்ல, 1,900 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.புரட்டாசி இரண்டாவது சனியான நேற்று ஏராளமான பக்தர்கள் படி வழியே கோவிலுக்கு சென்றனர். காலை, 9:30 மணிக்கு கோவையில் பிளக்ஸ் பேனர் கடை வைத்துள்ள, சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்த மாதேஷ்குமார், 53, மனைவி, மகள்களுடன் படிகள் வழியே சென்றார்.அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாதேஷ்குமார் மயங்கினார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை