உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவியின் கண் பாதிப்பு தலைமை ஆசிரியர் கைது

மாணவியின் கண் பாதிப்பு தலைமை ஆசிரியர் கைது

ஆத்துார்:சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி, மும்முடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியின், 10 வயது மகள் தலைவாசல் அரசு தொடக்கப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். கடந்த 22ல், வகுப்பறையில் இருந்தபோது, பள்ளி தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியருமான திருமுருகவேள், 57, பாடம் தொடர்பாக கேள்வி கேட்டார். சிலர் பதில் கூறாததால், அவர்கள் மீது பிரம்பு குச்சியை வீசினார்.அந்த குச்சி, அந்த மாணவியின் இடது கண் மீது விழுந்ததில் அலறி துடித்தார். அவருக்கு தனியார் கண் மருத்துவமனைகளில் அளிக்கப்பட்ட சிகிச்சையில், இடது கண் பார்வை பாதிக்கப்பட்டது உறுதியானது.இதுகுறித்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள் ஆத்துார் ஆர்.டி.ஓ., மற்றும் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தினர்.மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, தலைமை ஆசிரியர் திருமுருகவேள் மீது, கொடுங்காயம் ஏற்படுத்துதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை