விவசாயிகளுக்கு அடையாள எண் இன்று கணக்கெடுப்பு தொடக்கம்
மேட்டூர்: நாடு முழுதும் வசிக்கும் விவசாயிகளுக்கு தனித்தனி பதிவு எண் வழங்கப்பட உள்ளது. இது ஆதார் எண் போன்றது. இதன்-மூலம் எதிர்காலத்தில் விவசாய துறை, விவசாயம் சார்ந்த திட்டங்-களுக்கு நலத்திட்டங்கள் பெற பயன்படுத்தலாம். வங்கியில் விவ-சாய கடன் பெறவும், இந்த எண்ணை பயன்படுத்த வேண்டும். அதனால் வருவாய் கிராமங்களில் வேளாண் அலுவலர்கள் நடத்தும் முகாமில் விவசாயிகள், நில விபரங்களை தெரிவித்து அடையாள எண் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான பணி வரும், 14 வரை நடக்கவுள்ளது.மேச்சேரி, கொளத்துார் வட்டாரத்தில் உள்ள வருவாய் கிராமங்க-ளுக்கு, விவசாயிகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கவி-ருந்த நிலையில் கணினி தொழில்நுட்ப கோளாறால் இன்று தொடங்கும் என, வேளாண் அலுவலர்கள் கூறினர். வேளாண் உழவர் நலத்துறை அலுவலர்கள், வேளாண் தொழில்நுட்ப முகமை திட்ட பணி அலுவலர்கள், சமுதாய பண்ணை மகளிர், இப்பணியில் ஈடுபடவுள்ளனர்.