உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காவிரி ஆற்றில் சிலைகள் கரைப்பு

காவிரி ஆற்றில் சிலைகள் கரைப்பு

மேட்டூரில், 13, கொளத்துாரில், 21, கருமலைக்கூடலில், 23, மேச்சேரியில், 28 என, 85 விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். மாலையில் ஏராளமான பக்தர்கள், சேலம், தாரமங்கலம், நங்கவள்ளி, கொளத்துார் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் விநாயகர் சிலைகளை, மேட்டூர் கொண்டு வந்தனர். அங்கு காவிரி பாலம்; எம்.ஜி.ஆர்., பாலம் படித்துறை; சென்றாய பெருமாள் கோவில் அருகிலுள்ள மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதி; அணை திப்பம்பட்டி; கூனாண்டியூர் நீர்பரப்பு பகுதி ஆகிய இடங்களில் சிலைகடைள கரைக்க போலீசார் அனுமதி வழங்கினர். அதன்படி அந்த இடங்களில், பக்தர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்த சிலைகளை கரைத்தனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.183 சிலைகள் கரைப்புகல்வடங்கம் காவிரி ஆற்றில், 91 சிலைகள், பூலாம்பட்டி காவிரி ஆறு, பில்லுக்குறிச்சி வாய்க்கால், ஓணாம்பாறை வாய்க்கால் ஆகிய இடங்களில், 92 சிலைகள் கரைக்கப்பட்டன. பூலாம்பட்டி காவிரி ஆற்றில் சிலைகளை கொண்டு வந்தவர்களை கரைக்க சொல்லாமல், துடுப்பு படகு மூலம் ஆற்றின் நடுப்பகுதிக்கு கொண்டு கரைக்க, போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை