உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இப்தார் நோன்பு திறப்பு

இப்தார் நோன்பு திறப்பு

ஆத்துார்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஆத்துாரில், அ.தி.மு.க., மற்றும் முஸ்லிம் இளைஞர் அணி சார்பில், மதநல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் நோன்பு கஞ்சி உள்ளிட்ட உணவு வகைகளை வழங்கினர். ஆத்துார் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், நகர செயலர் மோகன், புனித ஜெயராக்கினி ஆலய பங்கு தந்தை அருளப்பன், முஸ்லிம் அமைப்பினர் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் புதுப்பேட்டையில், முஸ்லிம் இளைஞர் அணி சார்பில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளிவாசல் நிர்வாகிகள், சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.அதேபோல் தலைவாசல், வீரகனுாரில், த.வெ.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலர் வெங்கடேசன் தலைமையில் கட்சியினர், முஸ்லிம் சமுதாயத்தினர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை