சுதந்திர தின விடுமுறை சுற்றுலா பயணியர் ஜாலி
ஏற்காடு, ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சுதந்திர தினத்தை ஒட்டி விடுமுறை தினமான நேற்று, ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் போன்ற இடங்களை குடும்பத்துடன் கண்டுகளித்தனர். படகு இல்லத்தில், சவாரி செய்ய அதிகளவில் சுற்றுலா பயணியர் குவிந்தனர். பயண சீட்டை வாங்கி கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.