உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மழை நீர் பாதையை துார்வார வலியுறுத்தல்

மழை நீர் பாதையை துார்வார வலியுறுத்தல்

பனமரத்துப்பட்டி:மல்லுார் டவுன் பஞ்சாயத்தில், அத்திக்குட்டை உள்ளது. அங்கு, சாக்கடை கழிவு நீர் தேங்கி, பச்சை நிறத்துக்கு மாறி துர்நாற்றம் வீசுகிறது. அதன் உபரி நீர், கால்வாய் வழியாக ஓட்டேரிக்கு சென்றடையும். சமீபத்தில் பெய்த மழையால், அத்திக்குட்டையில் இருந்து வந்த கழிவு நீர், ரேஷன் கடை, கால்நடை மருந்தகம், பால் கூட்டுறவு சங்கம் ஆகிய கட்டடங்களை சூழ்ந்தது.இது குறித்து, மல்லுார் நகர அ.தி.மு.க., செயலர் பழனிவேலு கூறியதாவது:இரண்டு மாதத்துக்கு மேலாக, தண்ணீர் நிற்பதால், கால்நடை மருந்தகம், பால் கூட்டுறவு சங்கம், வேளாண் கூட்டுறவு சங்கம், ரேஷன் கடை ஆகிய கட்டடங்கள் மண்ணில் புதைந்து சேதமடையும் ஆபத்து உள்ளது.இது குறித்து, அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. ஓட்டேரிக்கு மழை நீர் செல்லும் வழித்தடத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை