உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இறந்தவர், இடம் பெயர்ந்தோரை நீக்க வலியுறுத்தல்

இறந்தவர், இடம் பெயர்ந்தோரை நீக்க வலியுறுத்தல்

ஆத்துார், ஆத்துார், கெங்கவல்லி சட்டசபை தொகுதிகளில், புது ஓட்டுச்சாவடி அமைப்பது தொடர்பாக, ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., தமிழ்மணி தலைமை வகித்து பேசுகையில், ''வாக்காளர்கள், 1,200 பேர் இருந்தால், புது ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும். ஒரே இடத்தில், 4 ஓட்டுச்சாவடி இருந்தால், வேறு இடத்தில் புது ஓட்டுச்சாவடி நிறுவ வேண்டும். ஓட்டுச்சாவடி மாற்றம் தொடர்பான மனுக்களை, 2 நாளில் வழங்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, தி.மு.க., அ.தி.மு.க., வி.சி., கட்சியினர், 'இறந்தவர்களின் பெயர்களை, உரிய ஆவணங்கள் பெற்று நீக்க வேண்டும். ஆத்துாரில் வெவ்வேறு இடங்களில், வசிஷ்ட நதி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றியபோது, 150க்கும் மேற்பட்டோர், எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. ஆனால் வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் இன்றும் உள்ளன. புறவழிச்சாலை மற்றும் நீண்ட துாரம் சென்று ஓட்டுப்போடும் நிலை உள்ளது. இதனால் சிலர் ஓட்டுப்போட வருவதில்லை. மக்கள் வசிக்கும் பகுதியில் ஓட்டுச்சாவடி மையம் அமைக்க வேண்டும்' என்றனர்.தமிழ்மணி, 'இடம் பெயர்ந்தோர் நீக்கம் குறித்து சிறப்பு கவனம் எடுத்து, பட்டியல் விபரம் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தவர்களின் விபரம் பெற்று நீக்கப்படும். ஓட்டுச்சாவடிகள் குறித்து ஆய்வு செய்து, சரியான முறையில் அமைக்கப்படும்' என்றார்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, நகர செயலர் மோகன், தி.மு.க., ஒன்றிய செயலர் செழியன், தே.மு.தி.க., காங்., இ.கம்யூ., மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ், வி.சி., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.கட்டுரை போட்டிசேலம் பெரியார் பல்கலையில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரைப்போட்டி நேற்று நடந்தது. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை தலைவர் பரிமளவல்லி தொடங்கிவைத்தார். 'நான், 17(வயது) பதிவு செய்ய தயாராக இருக்கிறேன் - வாக்களிக்க தயாராக இருக்கிறேன்' என்ற தலைப்பில் நடந்த போட்டியில், பல்துறை சார்ந்த, 40 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்கலை தேர்தல் அதிகாரி இளங்கோவன், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ