வாலிபருக்கு அடி உதை வைரலானதால் விசாரணை
பள்ளிப்பாளையம்:பெரியார் நகர் பகுதியில், வழி மறித்து வாலிபர் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வைரலானதால், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.பள்ளிப்பாளையம் அருகே பெரியார் நகர் பகுதியில் கடந்த, 28ம் தேதி வாலிபர் ஒருவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே டூவீலரில் வந்த இருவர், தனியாக வந்தவரை வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கோவில் முன் நடந்துள்ளது. அங்கிருந்த கண்காணிப்பு கேமாரவில் தாக்குதல் காட்சி பதிவாகி இருந்தது, இந்த பதிவு நேற்று முதல் சமுக வலைதளங்களில் வைரலானது.இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.