மலர் கண்காட்சியில் அழகு தோட்ட போட்டியில் பங்கேற்க அழைப்பு
சேலம்: சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் மஞ்சுளா அறிக்கை: சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 48வது மலர் கண்காட்சி, கோடை விழா முன்னேற்பாடு பணி நடக்கிறது. தோட்டக்கலை மலைப்பயிர் துறை சார்பில் அழகு தோட்டங்களுக்கு போட்டி நடத்தப்பட உள்ளது. வீட்டு தோட்டம் (500 சதுர அடிக்கு குறைவாக), மாடித்தோட்டம், பங்களா தோட்டம் (500 சதுரடிக்கு மேல்), ஓட்டல், நிறுவனங்கள் உள்ளிட்ட தோட்டங்கள் போன்றவற்றை பராமரிப்பவர்கள் பங்கேற்கலாம்.https://tnhorticculture.tn.gov.in/site- uploads/Salem.Garden.Application.pdf என்ற இணையத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்து, சேலம் பகுதியை சேர்ந்தவர்கள், 'வினோதினி, உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், சீலநாயக்கன்பட்டி, சேலம்' எனும் முகவரியில் ஒப்படைக்க வேண்டும். தொடர்புக்கு, 95977-51999 என்ற எண்ணில் அழைக்கலாம். ஏற்காட்டை சேர்ந்தவர்கள், 'மோகன், தோட்டக்கலை உதவி இயக்குனர், அண்ணா பூங்கா, ஏற்காடு' என்ற முகவரியில் வழங்கலாம். தொடர்புக்கு, 99422-51436 என்ற எண்ணில் பேசலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும், 17ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சேலம் கலெக்டர் பிருந்தாதேவி கூறுகையில், ''ஏற்காடு மலர் கண்காட்சி, கோடைவிழா வரும், 24ல் தொடங்கி ஒன்பது நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் விழாவை தொடர்ந்தே, ஏற்காடு விழா தேதி முடிவு செய்யப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்,'' என்றார்.