ரயில்களில் விதிமீறி பயணம்; 6 மாதத்தில் ரூ.10 கோடி வசூல்
சேலம்: சேலம் கோட்டத்தில் உள்ள ஸ்டேஷன்கள், ரயில்களில், டிக்கெட் பரிசோதகர்கள் தலைமையில் குழுவினர், தொடர்ந்து சோதனை நடத்துகின்றனர். இதில் கடந்த ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையில், டிக்கெட் இல்லாமல் பயணித்த, 79,006 பேரிடம்இருந்து, 6.28 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.மேலும் முறையான டிக்கெட் இன்றி பயணித்த, 68,681 பேரிடம், 3.71 கோடி ரூபாய், கூடுதல் லக்கேஜ் எடுத்துச்சென்ற, 206 பேரிடம், 1.25 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 6 மாதங்களில், 10.82 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 37.1 சதவீதம் அதிகம் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.