மேலும் செய்திகள்
கார் மோதி டீ மாஸ்டர் சாவு
03-Sep-2024
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் ஒரு பிரிவு மக்களுக்குரிய மயானம் உள்ளது. அதற்கு செல்லும் பாதையில் ஊராட்சி கான்கிரீட் சாலை, பொது கிணறு, தரைமட்ட குடிநீர் தொட்டி, ஆழ்துளை குழாய் கிணறு உள்ளன. ஆனால் அப்பாதைக்கு தனிநபரும், ஊர் பொது இடம் என மற்றொரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகின்றனர். ஒரு தரப்பினர், பாதை நடுவே கல் நட்டுள்ளனர். மேலும், 'இந்ந தடம் பட்டாவில் உள்ளது. பொது வழி அல்ல. மயானம் செல்ல பயன்படுத்தக்கூடாது' என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதேநேரம் மயானம் செல்வதற்கு பல விவசாயிகள், பட்டா நிலத்தில் இடம் விட்டுள்ளனர். தற்போது கல் நடப்பட்டதால் விவசாயிகள், அவர்களது பட்டா நிலம் வழியே செல்லும் பாதையில் குழி வெட்டினர்.இந்நிலையில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாள், 55, உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். மயானத்துக்கு செல்ல வழியின்றி சடலத்தை சாலையில் வைத்து போராட உறவினர்கள் திட்டமிட்டு கூடினர். இதையறிந்து பனமரத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் ராஜவேல் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், மல்லுார் போலீசார் நேற்று காலை சென்று பேச்சு நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டு, மதியம் உடல் அடக்கம் செய்யப்பட்டது.வருவாய் துறையினர் கூறுகையில், 'ஒரு வாரத்தில் பேச்சு நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர். சாலை நடுவே நடப்பட்டிருந்த கல் அகற்றப்பட்டு குழி மூடப்பட்டது' என்றனர்.
03-Sep-2024