உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு; வாலிபருக்கு காப்பு

மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு; வாலிபருக்கு காப்பு

சேலம்: சேலம், மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்நதவர் வரதராஜன். இவரது மனைவி வசந்தி, 62. கடந்த, 27ல் தனது கணவருடன் வீட்டை பூட்டிவிட்டு சூரமங்கலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் மாலையில் வீடு திரும்பினர்.அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த, 1 பவுன் நகை, 27 ஆயிரத்து, 500 ரூபாய் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து, 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில், வசந்தி வீட்டின் மேல் மாடியில் குடியிருந்து வரும் குமார், 32, என்பவர் நகை, பணம் திருடியது தெரியவந்தது. பின், குமாரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி