இலவச வீட்டுமனை பட்டா ஓமலுார் அருகே காடையாம்பகேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இலவச வீட்டுமனை பட்டா ஓமலுார் அருகே காடையாம்பகேட்டுகலெக்டர் அலுவலகம் முற்றுகைசேலம், நவ. 5-இலவச வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து, நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.ட்டி கொண்டாரெட்டி புதுார், குண்டுக்கல் கிராமத்தை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார், ஐந்து பேரை மட்டும் மனு அளிக்க அனுமதி அளித்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:எங்கள் பகுதியில், 200 குடும்பங்கள் உள்ளன. கழிப்பிடம், குடிநீர் வசதியின்றி தவித்து வருகிறோம். வீட்டுமனை பட்டா கேட்டு, 50 ஆண்டுகளாக போராடி வருகிறோம். பல முறை மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. கூலி வேலை செய்து வரும் நாங்கள், வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். உரிய விசாரணை நடத்தி, வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.