உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிய பெண் கொலை உடலை எரித்த கள்ளக்காதலன், சிறுவன் கைது

தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிய பெண் கொலை உடலை எரித்த கள்ளக்காதலன், சிறுவன் கைது

வாழப்பாடி: தாய் வீட்டுக்கு செல்வதாக கூறியதால், ஆத்திரத்தில் கள்ளக்காதலியை கொடூரமாக கொலை செய்த கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்தனர். அவரது உடலை எரிக்க உதவியதாக, 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி, மலையாளப்பட்டி அருகே வல்லரசு என்பவர் வீடு எதிரே, நேற்று முன்தினம் மதியம், அடையாளம் தெரியாத பெண்ணின் உடல், பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. வாழப்பாடி போலீசார் விசாரணையில் அந்த பெண், மயிலாடுதுறையை சேர்ந்த சுகுணா, 29, என தெரிந்தது. அவரை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த வல்லரசு, 35, கொன்று உடலை எரித்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரது உறவினரான, 17 வயது சிறுவனையும் கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கண்ணன் என்பவருடன் திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடால், 3 ஆண்டாக சுகுணா தனியே வசிக்கிறார். இந்நிலையில் கொல்லிமலையை சேர்ந்த வல்லரசுடன், 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. வல்லரசு திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் சுகுணா, மலையாளப்பட்டியில் அரளிப்பூ பறிக்கும் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்குள்ள வல்லரசுவின் காட்டுக்கு வந்து இருவரும் வசித்துள்ளனர்.இரு நாட்களுக்கு முன் அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் சுகுணா, தாய் வீட்டுக்கு செல்வதாக கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த வல்லரசு, கத்தியால் சுகுணாவின் கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பின் உடலை, அவரது உறவினரான, 17 வயது சிறுவனுடன் சேர்ந்து பட்டப்பகலில் வீடு முன் விறகுகளை வைத்து எரித்துள்ளார். வல்லரசு மீது ஏற்கனவே ஒரு பெண்ணை வெட்டிக்கொன்ற வழக்கு, சிறுமியை துன்புறுத்திய, 'போக்சோ' வழக்கு நிலுவையில் உள்ளன. அவர், கொல்லிமலையில் மந்திரவாதி என கூறி வந்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ