உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கும்பாபிேஷகம் கோலாகலம்

கும்பாபிேஷகம் கோலாகலம்

வீரபாண்டி, நவ. 9-ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, வெள்ளையகவுண்டனுார் இருசாயி அம்மன், முனியப்பன் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த அக்., 28ல் தொடங்கியது. நேற்று முன்தினம் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு மேல், இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று அதில் வைத்திருந்த புனிதநீர் கலசங்களை, சிவாச்சாரியார்கள் சுமந்து, ஊர்வலமாக கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து, 8:00 முதல், 9:00 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபி ேஷகம் நடத்தி வைத்தனர். மூலவர் இருசாயி அம்மன், முனியப்பன் சுவாமிகளுக்கு சர்வ அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை