மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
30-Aug-2025
ஆத்துார்:ஆத்துார், மேற்குராஜாபாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில், மூப்பனார் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.காலை, 9:00 மணிக்கு, சக்தி மாரியம்மன், மூப்பனார் கோவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அவர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.அதேபோல் தலைவாசல், கிழக்குராஜாபாளையம் சிதம்பரேஸ்வரர், விநாயகர், மாரியம்மன், கம்பத்து பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
30-Aug-2025